மழையுடன் கூடிய வானிலை ! #Video

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய – வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப் பகுதிகளில் சில இடங்களில் 75 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் மேலும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 – 50 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.




