2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தால் வந்த சிக்கல்

உலகம்August 20, 2025 · 12 months முன்0
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தால் வந்த சிக்கல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசீம் அக்ரம் மீது ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து லாகூரில் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.

பாகிஸ்தானை சேர்ந்த முகமது பைஸ் என்பவர் லாகூரில் உள்ள தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசீம் அக்ரம் மீது புகார் அளித்துள்ளார். அதில், ‛பாஜி’ எனும் வெளிநாட்டு சூதாட்ட செயலியின் விளம்பர தூதராக வாசீம் அக்ரம் நியமிக்கப்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், அந்த சூதாட்ட செயலியின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களில் வாசீம் அக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் இதுப்பற்றி தேசிய சைபர் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக வாசீம் அக்ரம் இதுவரை எந்தவொரு விளக்கமும் தெரிவிக்கவில்லை. மேலும், இதே செயலியை விளம்பரப்படுத்தியதாக பிரபல டிக்டாக் மற்றும் யுடியூப் நட்சத்திரமான சாத்-உர்-ரெஹ்மான் கடந்த ஆகஸ்ட் 16ல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.