2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛈️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!சட்டவிரோத சிகரெட் கடத்தல் – ரூ.3 மில்லியன் சரக்கு பறிமுதல்!சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்புஅடுத்த 24 மணித்தியாலங்களில் தீவிர தாழமுக்கமாக மாறும் சாத்தியம்!

பிரமிட் திட்டம் தொடர்பாக ஏழு பேர் கைது.

உள்ளூர்October 24, 2025 · 11 months முன்2
பிரமிட் திட்டம் தொடர்பாக ஏழு பேர் கைது.

பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்நெவ, ஹோகந்தர, பேராதனை மற்றும் கொழும்பு 04 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையின் பின்னர் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பான, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.