2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

புடின் கைது செய்யப்படுவார்-எச்சரிக்கை

உலகம்October 22, 2025 · 10 months முன்2
புடின் கைது செய்யப்படுவார்-எச்சரிக்கை

ஹங்கேரிக்கு செல்லும் வழியில், ரஷ்ய ஜனாதிபதி புடின் தங்கள் நாட்டு வான்வெளி வழியாக பறந்தால் கைது செய்யப்படுவார் என போலந்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஹங்கேரியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க இருக்கிறார். அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கின்றனர். இந்த சூழலில், ஹங்கேரியில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக தனது வான்வெளி வழியாக ரஷ்ய ஜாதிபதி புடின் பயணிக்க கூடாது என்று போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கூறியதாவது: ஹங்கேரிக்கு செல்லும் வழியில் புடின் எமது வான்வெளியை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், சர்வதேச கைது பிடியாணையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர் கைது செய்யப்படுவார்.