2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காலியின் பல பகுதிகளில் 30 மணிநேர நீர்வெட்டு

உள்ளூர்October 19, 2025 · 10 months முன்1
காலியின் பல பகுதிகளில் 30 மணிநேர நீர்வெட்டு

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. 

நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21) பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

காலியில் உள்ள ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, போபே, போத்தல, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. 

அஹங்கம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 

நீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.