2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

மீள் ஏற்றுமதி செய்யப்படும் 23,500 டன் உப்பு

உள்ளூர்October 19, 2025 · 10 months முன்0

சிக்கல்கள் காரணமாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,500 மெற்றிக் டன் உப்பை மீள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்திற்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் தரக் குறைப்பாடு காணப்படும் ஒரு தொகுதி உப்பை வௌியிடுவதற்கு இலங்கை சுங்கம் மறுப்பு வௌியிட்ட நிலையில் அது தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. 

இதற்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

எவ்வாறாயினும் அந்த அனுமதி கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் தரக் குறைப்பாடு காணப்பட்ட உப்பை விடுப்பதற்கு சுங்கத் திணைக்களம் மறுப்பு வௌியிட்டது. 

இந்த அறிவிப்பின்படி செயல்படாவிட்டால், சம்பந்தப்பட்ட உப்பு தொகுதி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.