2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

காரூரில் – பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

உலகம்October 13, 2025 · 10 months முன்2
காரூரில் – பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

தமிழ்நாடு – கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

– இவ் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது. நீதித்துறை, பொலிஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.

காரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் ஏற்படுமென பொலிஸார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கூடிய விரைவில் தலைவர் விஜய் காரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

என த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.