2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சஜித் – ரணில் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

உள்ளூர்October 13, 2025 · 10 months முன்2
சஜித் – ரணில் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

– இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயம் இது இதற்கு முன்னரே நடந்து இருக்க வேண்டும் இவ்வாறு நடந்து இருந்திருந்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும் விடயங்கள் நடந்திருக்கும்.

எனினும் கடந்த காலங்களில் இரு தலைவர்கள் மத்தியிலும் காணப்பட்ட தலைமைத்துவம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களில் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையால் அந்த முயற்சிகள் கைகூட முடியாது போயிருந்தது இவ்வாறு இணைந்து இருந்திருந்தால் முன்பு நடைபெற்ற பல்வேறு தேர்தலில் பல வெற்றிகரமாக சம்பவங்களை சந்தித்து இருக்கலாம் .

தற்போது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும், அதனை நாம் முழுமையாக வரவேற்பததோடு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் இது விரைவிலேயே நடைபெற வேண்டும் என நாங்கள் இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

அடுத்துவருகின்ற தேர்தல்களை கையாள்வதற்கு இவ்விரு கட்சிகளும் இணைந்து உரிய தலைமை வகித்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என தெரிவித்தார்.