2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

உலகம்October 10, 2025 · 10 months முன்2
பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

10 அடி வரை சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.