தொடர்ந்து உயரும் தங்க விலை.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரம்,
கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்த 22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரம் 306,000 ரூபாவாக நிலவிய 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




