2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று.

உள்ளூர்October 7, 2025 · 10 months முன்2
இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்ளுதல், ஊசிகள் பயன்பாடு, கர்ப்பிணிக்கு எயிட்ஸ் இருக்குமாயின் பிறக்கும் குழந்தைக்கும் எயிட்ஸ் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை 6740 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

மேலும், எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளைப் பெறுவதற்கு தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் [94703733933] தொலைபேசிஎண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.