2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சம்மாந்துறையில் 18 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

உள்ளூர்October 7, 2025 · 10 months முன்2
சம்மாந்துறையில் 18 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப் குமாரவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டு மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லல் , சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் செல்லல் , நீதிமன்ற பிடியாணை என பலர் கைதானதோடு மோட்டார் சைக்கிள்கள் 18 க்கும் மேற்பட்டவைகள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சுற்றி வளைப்பின் போது சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம், கல்முனை ,காரைதீவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 வயது சந்தேக நபர் மற்றும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் என குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் திட்டமிடலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.