2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்.

உள்ளூர்September 27, 2025 · 11 months முன்2
வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்.

நாட்டில் 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், 2024 மற்றும் 2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை வங்கியின் எந்தக் கிளையிலும் அல்லது இணைய வழியினூடாகவும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகு செலுத்தப்படும் வரி, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், அது தாமதமான செலுத்துதல்கள் என்று கருதப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், தாமதமாகக் செலுத்தப்படும் வரிகளுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் தள்ளுபடி செய்யப்படவோ, குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.