2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்பாட்டம் !

உள்ளூர்September 27, 2025 · 11 months முன்2
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்பாட்டம் !

மன்னார் பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிசாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டும் வவுனியாவில் இன்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் வவுனியாமாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

– இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

மன்னாரில் கடந்த56 நாட்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்தஅரசு மக்களுக்கு விரோதமான முறையில் காட்டுமிராண்டித்தனமான செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ளது. எனவே இந்த திட்டத்தை அரசு உணடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். என்று தெரிவித்தனர்.

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்ற போராட்டக்காறர்கள் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கிவைத்தனர்.