2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நெதன்யாகுவின் உரைக்கு ஐ.நா சபையில் எதிர்ப்பு.

உலகம்September 27, 2025 · 11 months முன்2
நெதன்யாகுவின் உரைக்கு ஐ.நா சபையில் எதிர்ப்பு.

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்தபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அவருக்கு எதிர்ப்பாக அவையை விட்டு வெளியேறினர்.

மேலும், நெதன்யாகு உரையில் “பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். சிறிய ஆதரவுடன் சுமார் ஏழு மோதல்களை இஸ்ரேல் கையாள்கிறது” என்று பேசினார்.

அவரது உரையின்போது அதிகமான இருக்கைகள் வெற்றிடமாக இருந்தன. இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவரது உரை, காஸா எல்லையில் நேரடியாக ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.