2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மன்னாரில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் விழிப்புணர்வு போராட்டம்.

உள்ளூர்September 22, 2025 · 11 months முன்2
மன்னாரில்  தீப்பந்தம் ஏந்தி மக்கள் விழிப்புணர்வு போராட்டம்.

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது கையில் தீ பந்தத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,இளையோர் ,பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.