2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உக்ரைனிய உளவுத்துறையின் செயலால் ரஷ்ய கடும் கோபத்தில்

உலகம்September 15, 2025 · 11 months முன்1
உக்ரைனிய உளவுத்துறையின் செயலால் ரஷ்ய கடும் கோபத்தில்

உக்ரைனிய உளவுத்துறையின் செயலால் ரஷ்ய கடும் கோபத்தில்

உக்ரைனிய இராணுவ உளவுத்துறையின் ஒரு வட்டாரம், ரஷ்யாவின் ஆயுதங்களை ஏற்றிச்சொன்ற தொடருந்து மீதான இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததை உறுதிப்படுத்தியள்ளது. இதில் மூன்று ரஷ்ய தேசிய படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு ரஷ்யாவின் மேற்கு ஓரியோல் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் ஒரு பகுதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

மற்றொரு தாக்குதலில், டேங்கர் வண்டிகள் “அவற்றின் எரிபொருளுடன் அழிக்கப்பட்டன” என்று உக்ரைனின் GUR இராணுவ உளவுத்துறை வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் ரஷ்யப் படைகளுக்கான விநியோக வழிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைனிய GRU வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் தொடருந்து உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதன் விளைவாக, ரஷ்யர்கள் குறிப்பிடத்தக்க தளவாட சிக்கல்களை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

ரஷ்யாவின் பெர்ம் பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையிலிருந்து 1,500 கி.மீ. தொலைவில் வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு இரசாயன தொழிற்சாலையின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் தரப்பு தெரிவித்துள்ளது.