2026 September 11, Friday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்கிறது – பாகிஸ்தான் 268 ஓட்டங்கள் பின்னிலை!போர் பதற்றம் தீவிரம் – கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!தெஹிவளையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை – கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கொந்தளிப்பு எச்சரிக்கை!உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!புதிய ஐபோன்களுடன் ஆப்பிளின் அடுத்த தலைமுறை தொடக்கம்!22வது திருத்தம்: செப்டம்பர் 24, 25ல் பாராளுமன்ற விவாதம்!சட்டவிரோத சொத்து விசாரணையில் ரூ.100 மில்லியன் வீடுகள் சிக்கின!

மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை – கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கொந்தளிப்பு எச்சரிக்கை!

உள்ளூர்September 11, 2026 · 2 hours முன்3
மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை – கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கொந்தளிப்பு எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலையானது சுமார் (2.0 – 2.5) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.