2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!பூட்டான் பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் பிரதமர் ஹரிணி!80 ஆண்டுகளைக் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பயணம்!டைமண்ட் லீக் மகுடத்தை வென்ற ருமேஷ் தரங்க!மழையும் சூரியன் உச்சமும் – இன்றைய வானிலை நிலவரம்!

7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!

உள்ளூர்September 6, 2026 · 1 hour முன்4
7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!

வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. 

வறட்சியான வானிலை காரணமாக இந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் உள்ள 113,354 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இதில் அதிகபட்ச பாதிப்பு மொனராகலை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 நபர்களுக்கும், பதுளை மாவட்டத்தில் 5,435 குடும்பங்களைச் சேர்ந்த 20,418 நபர்களுக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

வறட்சியான வானிலை காரணமாக இதுவரை 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்ச பாதிப்பு மொனராகலை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. 

மேலும் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் வறட்சியான வானிலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.