2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
பூட்டான் பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் பிரதமர் ஹரிணி!80 ஆண்டுகளைக் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பயணம்!டைமண்ட் லீக் மகுடத்தை வென்ற ருமேஷ் தரங்க!மழையும் சூரியன் உச்சமும் – இன்றைய வானிலை நிலவரம்!தோட்டத் தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!சீனாவில் சர்வதேச ஊடகவியலாளர் நிகழ்ச்சி தொடக்கம்!எல் நினோ தாக்கம்; 7 மாவட்டங்களில் 1.15 இலட்சம் பேர் பாதிப்பு!எரிவாயு விலை குறைப்பு; தேநீர் விலையும் குறைகிறது!

டைமண்ட் லீக் மகுடத்தை வென்ற ருமேஷ் தரங்க!

விளையாட்டுSeptember 6, 2026 · 2 hours முன்3
டைமண்ட் லீக் மகுடத்தை வென்ற ருமேஷ் தரங்க!

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார். 

இதன் மூலம், டைமண்ட் லீக் இறுதிப் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே இலங்கை வீரர் என்ற வரலாற்றுப் பதிவை ருமேஷ் தரங்க தனதாக்கிக்கொண்டார். 

இலங்கை நேரப்படி இன்று (06) அதிகாலை நிறைவடைந்த இப்போட்டியில், அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்தச் சாதனையை நிலாநாட்டினார். 

இப்போட்டியில் ருமேஷிற்கு கடும் சவாலாக விளங்கிய போலந்தின் டேவிட் வேக்னர் (Dawid Wegner) 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

மேலும், 83.99 மீற்றர் தூரம் எறிந்த ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் கெஷோர்ன் வோல்கோட் (Keshorn Walcott) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.