2026 September 4, Friday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° ☀️ கண்டி 29° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!அமெரிக்காவுக்கு ஆயுத பஞ்சமே இல்லை – ட்ரம்ப்!இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீண்டும் IMF மதிப்பாய்வில்!நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு ஆஜர்!பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!அபுதாபியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குற்றவாளிகள் கட்டுநாயக்கவில் கைது!கதிர்காமம்–புத்தல வீதியில் யானை தாக்குதல்; பேருந்து விபத்து!

பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

உள்ளூர்September 4, 2026 · 2 hours முன்4
பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

இதற்கமைவாக, இன்று (04) நண்பகல் 12.09 மணிக்கு நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக்க, மீகஹாகிவுல உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.