2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இளைஞர் வெளியேற்றம் குறித்து பூட்டான் அரசருடன் ஹரிணி கலந்துரையாடல்!

உள்ளூர்September 3, 2026 · 2 months முன்12
இளைஞர் வெளியேற்றம் குறித்து பூட்டான் அரசருடன் ஹரிணி கலந்துரையாடல்!

பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செப்டெம்பர் 2 ஆம் திகதி திம்பு நகரின் தாஷிச்சோட்சோங்கில் பூட்டானின் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck) அரசரைச் சந்தித்தார். 

இச்சந்திப்பின் போது பூட்டானின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தக்கூடிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

பூட்டானின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இலங்கை கொண்டுள்ள அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதிலுள்ள விருப்பத்தைப் பூட்டான் அரசர் இங்கு வெளிப்படுத்தினார். 

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பூட்டானுக்குள் முதலீட்டு வலயமொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். 

அத்தோடு, பூட்டான் தற்போது எதிர்கொள்ளும் சனத்தொகை சவால்கள், குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளமை மற்றும் அது நாட்டின் எதிர்கால தொழிலாளர் படைக்கும் சனத்தொகைக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இரு நாடுகளினதும் நிலையான அபிவிருத்திக்காக இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதும், இரு நாடுகளினதும் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் (best practices) பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டது.