2026 September 3, Thursday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கதிர்காமம்–புத்தல வீதியில் யானை தாக்குதல்; பேருந்து விபத்து!ஹோர்முஸ் நீரிணைக்கு புதிய பெயர் பரிந்துரைத்த ட்ரம்ப்!மக்களின் இறையாண்மை மீறப்படுவதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டு!ஓடும் ரயிலில் பூஜை; பயணியை கைது செய்த ரயில்வே பொலிஸார்!இளைஞர் வெளியேற்றம் குறித்து பூட்டான் அரசருடன் ஹரிணி கலந்துரையாடல்!டெங்குவில் அலட்சியம் வேண்டாம் – வைத்தியர்கள் எச்சரிக்கை!மெஸ்ஸியின் விடைபெறலை கொண்டாடும் ஆர்ஜென்டீனா ரசிகர்கள்!வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன – சாணக்கியன்!

டெங்குவில் அலட்சியம் வேண்டாம் – வைத்தியர்கள் எச்சரிக்கை!

உள்ளூர்September 3, 2026 · 2 hours முன்4
டெங்குவில் அலட்சியம் வேண்டாம் – வைத்தியர்கள் எச்சரிக்கை!

தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானமாகச் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

சில மாவட்டங்களில் ஆரம்பத்தில் நுளம்புகளின் பெருக்கத்தை அவதானிக்க முடிவதுடன், அதன்பின்னரே நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாகவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் கவனயீனமாக செயற்பட்டால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

எனவே பொதுமக்கள் தமது சுற்றுபுறச் சூழலை மிகவும் தூய்மையாக பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.