2026 August 31, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!கோதுமை மா விலை உயர்வால் பாண் விலையிலும் மாற்றம்!கடும் வறட்சி – நீர் விநியோகத்திற்கு நேரக் கட்டுப்பாடு!வாக்குமூலம் அளிக்கச் சென்ற ரவி கைது!பெட்ரோல் விலையில் ஒரே நேரத்தில் அதிரடி குறைப்பு!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி குறித்து சட்டத்தரணி புதிய கோரிக்கை!முச்சக்கர கட்டணத்தில் மாற்றமில்லை!ஒரே வாரத்தில் ரூ.408 மில்லியனை கடந்த வருமானம்!

பூட்டானுக்கு புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

உலகம்August 31, 2026 · 7 hours முன்5
பூட்டானுக்கு புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார். 

செப்டம்பர் 1 ஆம் திகதி பூட்டானில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்கவுள்ளதுடன், அங்கு “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார். 

இப்பயணத்தின் போது பிரதமர், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.