2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்!

உலகம்September 8, 2025 · 11 months முன்1

உக்ரைன் மீது ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதனால் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஸெலென்ஸ்கி சமூகவலைதளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புட்டின் உலகை சோதிக்கிறார்.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புட்டின் பேச்சு வார்த்தைகளை விரும்பவில்லை இவ்வாறு ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளiதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.