2026 October 9, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட அறிவிப்பு!

உள்ளூர்August 21, 2026 · 2 months முன்22
பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட அறிவிப்பு!

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. 

எவ்வாறாயினும், அந்தத் தரவுக் கட்டமைப்பானது நேற்று (20) பகல் 12.50 மணி முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகிறது. 

இந்தக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கமைவாக, தரவுக் கட்டமைப்பு சீரமைக்கப்படும் வரை நற்சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தரவுக் கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியவுடன் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.