2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

உலகம்August 15, 2026 · 1 day முன்6
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியிருந்ததையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது. 

எனினும், பின்னர் அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பைத் திரும்பப் பெற அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அடுத்து இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், நிலநடுக்கத்தினால் அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதனால் இலங்கைக்கு எவ்வித தாக்கமும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது. 

அதன்படி, இலங்கைக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்எச்சரிக்கை மையம், நாட்டின் கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.