2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

வவுனியாவில் இடம்பெற்ற கருத்தரங்கு

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்1
வவுனியாவில் இடம்பெற்ற கருத்தரங்கு

மாகாண சபையும் அதிகார பகிர்வும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா மாநகர சபை மண்டபத்தில் நேற்றையதினம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒழுங்கமைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் குறித்த கருத்தரங்கானது இடம்பெற்றிருந்தது.

இதன்போது மாகாணசபை அதிகாரங்களும் அவற்றின் வீச்செல்லைகளும், காணி அதிகாரமும் மாகாண சபையும், தமிழ் தேசிய பரப்பின் பொறுப்பும் போன்ற தலைப்பின் கீழ் இணைந்த வடமாகாண சபையின் நிர்வாக அதிகாரி செல்வின், முன்னாள் மாகாண காணி ஆணையாளர் க.குருநாதன மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோரால் கருத்துரைகள் செய்யப்பட்டிருந்தது.

இக்கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மருத்துவர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி, மு.சந்திரகுமார், ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், மாநகர சபை மேயர் சு.காண்டீபன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.