2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

உள்ளூர்July 17, 2026 · 1 month முன்1
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!


இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்கும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்று (16.07.2026) இரத்னபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் சபரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், இரத்னபுரி மாவட்ட சுகாதார பாதிகாப்பு அதிகார சபை அதிகாரிகள், மூத்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரத்னபுரி மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சட்டவிரோத மதுபான ஒழிப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள், எதிர்கால செயற்திட்டங்கள், சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸார் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விளக்கமளித்தார்.

மேலும், சட்டவிரோத மதுபானத்தை ஒழிப்பதில் பொலிஸாரும் சட்டமும் மட்டும் போதுமானதாக இருக்காது; ஏனைய அரச துறைகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்பும் அவசியம் என சபரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட ரத்னபுரி மாவட்ட சுராபாது அதிகார சபை அதிகாரிகள், எதிர்கால சுற்றிவளைப்புகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக:

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான தற்போதைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது,

இரத்னபுரி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது,

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக,

ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அறிவித்தார்.