2026 October 15, Thursday ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை?

உள்ளூர்July 8, 2026 · 3 months முன்5
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை?

இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுவர்களை சமூக ஊடகங்களின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்த யோசனை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தச் செயற்திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கமும், ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) அமைப்பும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.