இன்றைய காலநிலை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்