2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிரடித் தா#குதல்!

உலகம்June 28, 2026 · 4 months முன்3
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிரடித் தா#குதல்!

ஈரான் மீது அமெரிக்க விமானப் படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.ஹோமுஸ் நீரிணையில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக, இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) களஞ்சியங்கள் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஈரானின் கடலோர ரேடார் மையங்கள் மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஈரான் மீண்டும் ஒருமுறை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளது. அவர்கள் எதிலிருந்தும் பாடம் கற்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிவரும் காலங்களில், அவர்களுடன் எந்தவொரு நியாயமான அணுகுமுறையையும் கையாள முடியாது’ என்று அவர் எச்சரித்துள்ளார்.