2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வெனிசுலாவில் 188 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

உலகம்June 26, 2026 · 2 months முன்2
வெனிசுலாவில் 188 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!


வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது 

அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. 

வெனிசுலாவில் நேற்று (25) 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 

இதில் இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கமானது, 1900 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக அங்கு 250க்கும் அதிகமான கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.