2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டெங்கு அபாய எச்சரிக்கை! 538 பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிப்பு

உள்ளூர்June 23, 2026 · 4 months முன்4
டெங்கு அபாய எச்சரிக்கை! 538 பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிப்பு

நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அவ் அறிக்கையின்படி, மேல் மாகாணமே அதிகளவான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. 

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பகுதி, மஹரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன மற்றும் கொதடுவ போன்ற பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதானமிக்கவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேபோல், கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவை, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர உள்ளிட்ட பல பகுதிகளின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அவதானப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரணை, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வத்துவை, களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகளின் பிரிவுகள் இதன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இதற்கு மேலதிகமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், புத்தளம், பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அதிஅவதானப் பட்டியலில் அடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது