2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

ஹோமாகம, மஹரகம, பன்னிபிட்டிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

உள்ளூர்June 23, 2026 · 2 months முன்2
ஹோமாகம, மஹரகம, பன்னிபிட்டிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (24) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (25) மாலை 6.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

லபுகம மற்றும் கலட்டுவாவவிலிருந்து மஹரகம வரை நீரை விநியோகிக்கும் பிரதான விநியோகக் குழாய்க்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அச்சபை அறிவித்துள்ளது.