2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; குவைத் விமான நிலையம் குறிவைப்பு.

உலகம்June 3, 2026 · 2 months முன்2
மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; குவைத் விமான நிலையம் குறிவைப்பு.

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது முனையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை அடுத்து, அங்கிருந்த வானூர்தி போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு, வானூர்திகள் அருகில் உள்ள வானூர்தி நிலையங்களுக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து குவைத், சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை அவசரக்கால திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வானூர்தி நிலையப் பணிகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் அப்துல்லா அல்-ரஜ்கி தெரிவித்துள்ளார்.

தற்போது சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதுடன், அதன் பின்னரே புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.