2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

4 மாதங்களில் பிரதான எரிபொருட்களின் விலை உயர்வு விபரம்!

உள்ளூர்June 1, 2026 · 3 months முன்3
4 மாதங்களில் பிரதான எரிபொருட்களின் விலை உயர்வு விபரம்!

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பிரதான எரிபொருட்களின் விலைகளும் நடப்பு ஆண்டில் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் இலங்கையின் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, மே 31 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5ஆவது முறையாகவும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் மண்ணெண்ணெய் விலையானது 56.6 வீதத்தினால் (103 ரூபாய்) அதிகரித்து, அதிக சதவீத விலை உயர்வைப்பதிவு செய்துள்ளது.

அத்துடன் ஒக்டேன் 92 பெட்ரோல் 48.6 வீதத்தினாலும், சுப்பர் டீசல் 48 வீதத்தினாலும், ஒட்டோ டீசல் 46.9 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையும், மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹோர்முஸ் நீரிணையின்’ (Strait of Hormuz) பாதுகாப்பு குறித்த அச்சமுமே உலகளவில் எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.