2026 October 15, Thursday ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஹோர்மூஸ் வழியாக பாகிஸ்தான்–சீனாவை நோக்கி எரிவாயு கப்பல்கள்!

உலகம்May 25, 2026 · 5 months முன்10
ஹோர்மூஸ் வழியாக பாகிஸ்தான்–சீனாவை நோக்கி எரிவாயு கப்பல்கள்!

இயற்கை எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக, குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘புவைரித்’ (Fuwairit) என்ற கப்பல் நாளை பாகிஸ்தானில் தனது சரக்குகளை இறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் கட்டாரில் சரக்குகளை ஏற்றியிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.இதனிடையே, இரண்டாவது கப்பலான ‘அல் ரய்யான்’ (Al Rayyan) கப்பலும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துவிட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பலும் கட்டாரில் சரக்குகளை ஏற்றியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.கடந்த மே 22 ஆம் திகதி, அந்த கப்பல் இறுதியாக வளைகுடா பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கப்பல் தற்போது ஓமன் மற்றும் ஈரானைப் பிரிக்கும் கடற்பகுதியில் நீரிணைக்கு வெளியே உள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி சீனாவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.