2026 October 12, Monday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° ☀️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கனமழை அபாயம் : கொத்மலை–கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்!

உள்ளூர்May 14, 2026 · 5 months முன்10
கனமழை அபாயம் : கொத்மலை–கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை –கம்பளை (B431) பிரதான வீதி இன்று முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பரகம்மன பகுதியில் மீண்டும் வீதியில் வெடிப்புகள் தோன்றி, புதிய மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்ததை அடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வீதியூடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு அபாயம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.