2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையில் மதுபான பயன்பாடு அதிகரிப்பு : ADIC அதிர்ச்சி தகவல்!

உள்ளூர்May 5, 2026 · 5 months முன்7
இலங்கையில் மதுபான பயன்பாடு அதிகரிப்பு : ADIC அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், மதுபான உற்பத்தி 17 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் மதுபானங்களின் விலைகளில் பெரிய மாற்றம் இல்லாதது நுகர்வு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.பணவீக்கம் இருந்தபோதிலும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பது இதற்கான தேவையை உயர்த்தியுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வரி உயர்வுகள் விற்பனை அளவைக் குறைத்திருந்த நிலையில், தற்போது கலால் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த மையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.