2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விசா காலம் முடிந்த பிறகு வெளியேற்றப்படும் மாணவர்கள்

உலகம்September 4, 2025 · 12 months முன்0
விசா காலம் முடிந்த பிறகு வெளியேற்றப்படும் மாணவர்கள்

விசா காலம் முடிந்த பிறகும் நாட்டில் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேற்றவுள்ளதாக பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

விசா காலாவதியான பின் புகலிடம் கோரும் சர்வதேச மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 15,000 மாணவர்கள் தங்கள் விசாக்கள் காலாவதியாகும் போது தஞ்சம் கோருவதாகப் பிரித்தானிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் தங்குவதற்கு சட்டபூர்வ உரிமை இல்லையென்றால், உரிய நபர்கள் வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு வெளியேறவில்லை என்றால் குறித்த தரப்பினர் வெளியேற்றப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

புகலிடம் கோரும் மாணவர்களில் முதலிடத்தில் பாகிஸ்தானியர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.