மகிந்த தங்கியுள்ள அரச இல்லத்தை சி.ஐ.டி கைப்பற்றுமா ?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது.
இவ் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




