2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தவெக தலைவர் விஜய்!

உலகம்April 23, 2026 · 4 months முன்2
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தவெக தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்தார்.அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், அவரது வாக்களிப்பு அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விஜய்யை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.