2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமைதி நடைப்பயணம் தம்புள்ளையில் இன்று ஆரம்பம்…

உள்ளூர்April 22, 2026 · 6 months முன்4
அமைதி நடைப்பயணம் தம்புள்ளையில் இன்று ஆரம்பம்…

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ அமைதிக்கான நடைப்பயணம், அரச அனுசரணையுடன் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகின்றது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. 

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடைப்பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அந்தப் பயணமே தற்போது இலங்கையில் ‘ஏஹிபஸ்ஸிகோ’ (Ehipassiko) அமைதி நடைப்பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர (Pannakara) தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர். இந்த அமைதி நடைப்பயணத்தில் ‘ஆலோகா’ (Aloka) எனும் நாயும் தேரர்களுடன் இணைந்துள்ளது. 

இந்த நடைப்பயணத்தின் முதல் நாளான இன்று மாத்தளை அலுவிஹாரை வரை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.