2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தது

உள்ளூர்April 20, 2026 · 4 months முன்2
சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அந்த எண்ணிக்கை 167,095 ஆகும். 

அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை தெரியவருகிறது.