2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!

இலங்கை பொலிஸ் திணைக்களம் 159வது ஆண்டு நிறைவு.

உள்ளூர்September 3, 2025 · 12 months முன்2
இலங்கை பொலிஸ் திணைக்களம் 159வது ஆண்டு நிறைவு.

இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்றுடன் (03) 159ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது.

1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார்.

159ஆவது பொலிஸ் திணைக்கள தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (03) பொலிஸ் களப் படை தலைமையகத்தில் சிறப்பு விழா நடைபெறவுள்ளது.

இதனால் கொழும்பு போக்குவரத்து பிரிவினர் சிறப்பு போக்குவரத்து திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் தும்முல்ல சந்தியிலிருந்த திம்பிரிகஸாய சந்தி வரையிலான ஹேவ்லொக் வீதியில் பின்வருமாறு வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் களப் படைத் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள வெளிச்செல்லும் பாதையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை பேருந்து தரிப்பிடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது — ஹேவ்லொக் வீதி, பொன்சேகா சந்திக்கு அருகே.

விழா காரணமாக, பம்பலப்பிட்டி – ஹேவ்லொக் வீதி வழியாக பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கனரக வாகனங்கள் (லொறி, டிப்பர், கன்டெய்னர்) கட்டுப்படுத்தப்படும்.