யாழில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட விளம்பர பலகை அகற்றம்

யாழ்.பருத்தித்துறை வீதியில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் மேம்பால விளம்பரப்பலகை வெட்டி அகற்றப்பட்டது.
குறித்த விளம்பர பலகை நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிந்த விளம்பரப் பலகை அமைப்பதற்கான விண்ணப்பம் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமல் யாழ் மாநகர சபைக்கு வழங்கப்பட்டதாகவும், சபையின் அனுமதியின்றி விளம்பரப்பலகை அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விளம்பரப்பலகை மாநகர சபையால் அகற்றப்பட்டுள்ளது.