2026 October 12, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ☀️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நிலக்கரி கொள்முதல் குறைபாடுகள் மின்சார கட்டணம் உயரும் அபாயம் – IMF எச்சரிக்கை

உள்ளூர்April 11, 2026 · 6 months முன்5
நிலக்கரி கொள்முதல் குறைபாடுகள் மின்சார கட்டணம் உயரும் அபாயம் –  IMF  எச்சரிக்கை

கொள்முதல் நடைமுறைகளில் உள்ள பலவீனங்கள் காரணமாக தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவது, இலங்கையின் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதற்குக் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜோர்ஜியு (Evan Papageorgiou) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயத்தை வலியுறுத்தினார். உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், மின் உற்பத்திச் செலவு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கென முன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பாபஜோர்ஜியு தெரிவித்தார். எவ்வாறாயினும், கட்டணத் திருத்தத்தின் போது சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் (EFF) 5வது மற்றும் 6வது மீளாய்வுகளுக்கான ஊழியர் மட்ட உடன்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன்படி, கிடைக்கவுள்ள அடுத்த தவணைத் தொகை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதற்கான அங்கீகாரம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன், அந்த காலப்பகுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தவணைத் தொகையுடன் இலங்கைக்கு இதுவரை கிடைத்துள்ள மொத்தத் தொகை 2.4 பில்லியன் டொலர்களாக உயரும். இதேவேளை, நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர் எல்லையைத் தாண்டியுள்ளமை பாராட்டுக்குரிய முன்னேற்றம் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், என்.டி.பி (NDB) வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் 13.2 பில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பாகவும் தாம் அவதானித்து வருவதாக பாபஜோர்ஜியு மேலும் தெரிவித்தார்.