2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

லெபனானின் சிடோன் நகரில் வான்வழித் தாக்குதல்

உலகம்April 8, 2026 · 4 months முன்0
லெபனானின் சிடோன் நகரில்  வான்வழித் தாக்குதல்

ஈரானுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையிலும், லெபனான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை.

லெபனானின் சிடோன் நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பொதுமக்கள் உயிரிலாந்துள்ளனர்.
ஈரானுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது, ஹிஸ்புல்லா அமைப்புக்கு பொருந்தாது என்பதை இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாகவே தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தடையின்றித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. சிடோன் பகுதியில் ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த காபி உணவகமாக இருந்த இடத்தைக் குறிவைத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.