2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

“உலக அமைதிக்கான மகத்தான தருணம் இது” டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

உலகம்April 8, 2026 · 6 months முன்5
“உலக அமைதிக்கான மகத்தான தருணம் இது”  டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் மலரவுள்ளதாகவும், உலக அமைதிக்கான ஒரு மகத்தான தருணம் இதுவென்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தற்போதைய பதற்றமான சூழலில் இருந்து விடுபட விரும்புவதாகவும், உலக நாடுகள் அனைத்தும் அமைதியையே எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைப்பதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் பாரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள அவர், ஈரான் தனது நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

சகல விதமான விநியோகப் பொருட்களுடன் அமெரிக்கா அங்கு நிலைபெற்றிருக்கும் எனவும், தற்போது அமெரிக்கா அனுபவித்து வரும் பொருளாதார செழிப்பைப் போன்றதொரு “பொற்காலம்” மத்திய கிழக்கிற்கும் உருவாகும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.